வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 டிசம்பர், 2011

நிஜாட் மீது சப்பாத்து வீச்சு : மௌனமானது ஈரானிய அரசு


ரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டை நோக்கி நபரொருவர் சப்பாத்தினை எறிந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நிஜாட் உரையாற்றிக்கொண்டிருந்த போது ரஷிட் என்ற 45 வயதான நபரொருவர் தனது சப்பாத்தினை ஈரானிய ஜனாதிபதியை நோக்கி வீசியெறிந்துள்ளார். எனினும் அச்சப்பாத்து அவரின் மீதுபடவில்லை. எனினும் பந்தை வீசியெறிந்த நபரை நிஜாட்டின் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். குறித்த நபர் தனது தொழிலை இழந்துள்ளதாகவும், அதற்கான நட்ட ஈட்டை அந்நாட்டு அரசாங்கம் வழங்கத் தவறியதால், இவ்வாறு அவர் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச்சம்பவம் தொடர்பில் ஈரான் உத்தியோகபூர்வ செய்தி எதனையும் வெளியிடவில்லை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீதும் கடந்த 2008 ஆம் ஆண்டு பாக்தாத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் சப்பாத்தினை எறிந்த சம்பவமும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’