வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 டிசம்பர், 2011

ஜெனீவாவில் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இலங்கை அரசு அஞ்சாது


திர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் அஞ்சப் போவதில்லை என சிரேஷ்ட அமைச்சர் டி.யூ குணசேகர இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
வெளிவிகார அமைச்சு மீதான நிதி ஒதுக்கும் விவாதத்தின் போது கருத்து தெரிவித்த குணசேகர, இந்த பிரச்சினையில் லத்தீன் அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்கா ஆகிய நாடுகள் எல்லாம் இலங்கையின் பக்கம் உள்ளன. எனவே உலக விடயங்களில் தமது ஆதிக்கத்தை இழந்து வரும் ஒரு சில நாடுகளின் குற்றச் சாட்டுக்களையிட்டு இலங்கை பயப்படப்போவதில்லை என கூறினார். 'சர்வதேச சமூகம் எமக்கு எதிராகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது யதார்த்தமானது அல்ல. லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிராக அணித்திரண்டுள்ளன. உலக அதிகாரம் ஆசியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சீனா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா ஆகியன வல்லரசுகளாக உருவாகி வருகின்றன. அவை எம்முடன் உள்ளன' என அவர் கூறினார். இந்த நாடுகள் சார்பாக எமது நாட்டின் கொள்கைகள் மாறியதால் சில நாடுகள் இலங்கையை மிரட்ட தொடங்கியுள்ளன என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’