வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 டிசம்பர், 2011

பெண்கள், சிறார்களை கடத்துவதற்கு எதிராக புதிய சட்டங்கள்: நீதி அமைச்சர்

பெண்கள் மற்றும் சிறுவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதுடன் அவற்றை முறியடிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை குற்றச்செயல்கள் தொடர்பான மூன்று நாள் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாட்டுக்கு நாடு பெண்களையும் சிறுவர்களையும் சட்டவிரோதமாக கடத்துதல், பணத்திற்காக பரிமாற்றுதல், போதைப்பொருள் வர்த்தகம் போன்ற குற்றச்செயல்கள் இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு ஊடாக மேற்கொள்ளப்படுவது அதிகரித்து காணப்படுகின்றது.
இவற்றை தடுப்பதற்கும் இல்லாதொழிப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.  இவ்வாறான குற்றச் செயல்களை தடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளன. எனினும் அவை தொடர்பில் இன்னும் சில சட்டங்களை விரைவில்  அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இதற்கு பொலிஸ் திணைக்களமும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையைப் பொறுத்தவரை பெண்கள் சம்பந்தப்பட்ட வகையில்; உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண்ணொருவரின் விடயத்தில் அண்மையில் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாகும்.
அது குற்றச்செயல்களை தடுக்கும் விடயத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்திருப்பதோடு சர்வதேசத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது என்றார்.
அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இச்செயலமர்வில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, மத்திய வங்கியின் புலனாய்வு பிரிவு மற்றும் அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’