வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 டிசம்பர், 2011

'நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் கட்சிகள் அனைத்தும் பங்குபற்ற வேண்டும்'

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் தமிழ் மக்களுக்கான உரிய தீர்வினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்குவார். இதற்காக ஜனாதிபதிக்கு தேவையான பலம் நாடாளுமன்றத்தில் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் கடந்த 2000ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரசியல் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு தேவையான பலம் நாடாளுமன்றத்தில் இன்மையால் அம்முயற்சி தோற்கடிக்கப்பட்டது. எனினும் அது இம்முறை நடைபெறாது என அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

அராசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நடைபெறும் பேச்சுவார்த்தையின் இறுதியில் ஏற்படும் தீர்மானம் அனைத்து கட்சிகளின் அங்கீகாரத்திற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கலந்துகொள்ள முடியும் என்றால், ஏன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள முடியாது? என அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினால் அது சிறந்தாக  இருந்தது. ஆனால், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சலசலப்புக்காக தான் உரையாறுகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வினோதமான கட்சியாகும். அராசாங்கத்திற்கும் அவர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பில் நம்பிக்கையில்லை என்பார்கள். பின்னர் மீண்டும் பேச்சு நடத்துவர். மீண்டும் அரசாங்கத்தை விமர்சிப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மீண்டும் 30 வருடங்கள் திரும்பி வரும் நிலையை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைகிறது என அமைச்சர் டக்ளஸ் குற்றஞ்சாட்டினார்.

தமிழ் மக்களுக்கான நிரந்த அரசியல் தீர்வு எந்தவொரு தமிழ் கட்சியிடமும் இல்லை என குறிப்பிட்ட அவர், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் படி ஈ.பி.டி.பி கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள கோரிக்கையே நிரந்த தீர்வு என்றார்.

எனினும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்த முடியாது. ஆனால் குறித்த ஒப்பந்தத்தை பகுதி பகுதியாக அமுல்படுத்த முடியும். இதன் இறுதியில் மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் வழங்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

'பல தமிழ் கட்சிகள் சண்டை பிடித்து கொண்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புது டில்லி சென்று இந்திய தலைவர்களை சந்தித்தனர்.

இதன்போது, அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஏதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். இறுதியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உண்டா என இந்திய தலைவர்கள் கேட்டத்தற்கு வாய்மூடி மௌனியா இருந்துள்ளனர்' என அவர் குறிப்பிட்டார்.

'தமிழ் மக்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி எதாவது தவறு விட்டிருந்தால் அதை நியாயபூர்வமாக யாரும் சுட்டிக்காட்டினால் திருந்தி நடக்கவும் தயாரகவுள்ளோம்'  எனவும் அவா கூறினார். (படங்கள்: ஈ.பி.டி.பி. ஊடக பிரிவு)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’