வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 டிசம்பர், 2011

தருஷ்மன் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இராணுவத்தினரின் அறிக்கை


ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட தருஷ்மன் அறிக்கையில் பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தாம் அறிக்கையொன்றை தயாரித்து வருவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
'தருஷ்மன் அறிக்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கும். முப்படைகளும் இணைந்து தயாரித்து வரும் இந்த அறிக்கை சர்வதேச சமூகத்திடம் விரைவில் கையளிக்கப்படும்' என அவர் கூறினார். 'பொதுமக்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாத கொள்கை அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்' என சப்புஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் பயிலும் மாணவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் கூறினார். மனிதாபிமான நடவடிக்கையின்போது இராணுவத்தின் பாத்திரம் பற்றி ஆராயவென சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இராணுவத்தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’