தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் தமிழர்களையும் குற்றம் சாட்டும் விதத்திலேயே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. இதனை சர்வதேசம் கருத்தில் எடுக்காது சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ். அலுவலகத்தில் நேற்றுமாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னணியின் உப தலைவரும் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அறிக்கையை சர்வதேசம் நம்பியிராத நீதி, நியாயங்களை விரும்பும் சர்வதேசம் போர்க் குற்றம் தொடர்பில் இறுதி 3 வருட யுத்த குற்றச்சாட்டுகளை மட்டும் கணக்கில் எடுக்காது 30 வருடங்கள் இடம்பெற்ற போரை கணக்கில் எடுக்க வேண்டும். ஆனால் போர் என்ற பாராது தமிழன் அழிப்பு என்ற பார்வையில் கடந்த பல வருடகால இன அழிப்பையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’