சரத் பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பை அடுத்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'பொன்சேகாவின் பெயர் இராணுவ வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் முன்னாள் இராணுவத் தளபதி என்ற நிலைக்குள் உள்ளடங்க மாட்டார். எனினும், இலங்கையில் செயற்படும் தனியார், அரசாங்க ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத் தளபதி என குறிப்பிடப்படுகின்றது. எனினும், ஊடகங்கள் அதனை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப் போவதில்லை. இதன்படி இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளாக 1952ஆம் ஆண்டில் இருந்த பிரிகேடியர் சின்கிளேயர், 1955இல் இருந்த பிரிகேடியர் எப்.எஸ்.ரெய்ட், 1959இல் இருந்த மேஜர் ஜெனரல் ஏ.எம்.முத்துக்குமாரு, 2000ஆம் ஆண்டில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரசூரிய, 2004ஆம் ஆண்டில் இருந்த லெப்டினனட் ஜெனரல் லயனல் பலகல்ல, 2005ஆம் ஆண்டில் இருந்த ஜெனரல் கொட்டேகொட ஆகியோரின் பெயர்களே இனிவரும் காலங்களில் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’