ஆப்கானிஸ்தானில் இன்று செவ்வாய்;க்கிழமை இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 52 பேர் பலியாகியுள்ளனர்.
தலைநகர் காபூலில் ஷியா பிரிவினரின் புனித நாளையொட்டி தொழுகையில் மக்கள் திரண்டிருந்த பள்ளிவாசலை இலக்குவைத்து இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் 48 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனவும் அஞ்சப்படுகிறது. இதேவேளை, வடபகுதியான மசகர் ஷெரீப் பகுதியில் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’