வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 நவம்பர், 2011

ரெயிலில் இருந்து தள்ளி பெண் கற்பழித்து கொலை: தமிழக வாலிபர் வழக்கில் இன்று கோர்ட்டில் தீர்ப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சொரனூர் மஞ்சகாட்டு பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரவு சவுமியா பணி முடிந்து திருச்சூர்-எர்ணாகுளம் ரெயிலில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பெண்கள் பெட்டியில் தனியாக இருந்த சவுமியாயை அங்கு அத்துமீறி நுழைந்த விருத்தாச்சலத்தை சேர்ந்த வாலிபர் கோவிந்தசாமி(வயது30) பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதில் ஏற்பட்ட தகராறில் சவுமியாவை ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கோவிந்தசாமி தானும் கீழே குதித்தார். பின்பு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சவுமியாவை கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி சவுமியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சொரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருச்சூர் அதிவிரைவு கோர்ட்டில் கடந்த 4 மாதங்களாக நடந்து வந்தது. 85-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நீதிபதி ரவீந்திரன் பாபு விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிந்தசாமி குற்றவாளி என்று நிரூபனமானது. இதை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. கோவிந்தசாமிக்கு தண்டனை அறிவித்த பின் சவுமியாவின் பிரேத பரிசோதனை குறித்து தவறான அறிக்கை கொடுத்த டாக்டர் உம்ரேஷ் என்பவர் மீதும் கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’