வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 நவம்பர், 2011

நாடாளுமன்ற மோதல் தொடர்பாக ஜெனீவா, லண்டனில் ஐ.தே.க. முறைப்பாடு


நாடாளுமன்றத்தில் ஐ.தே.க. எம்.பிகள் தாக்கப்பட்டமை தொடர்பாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் லண்டனில் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அரச தரப்பு எம்.பிகளுக்கும் எதிர்க்கட்சி எம்.பிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதைடுத்து ஐ.தே.க. எம்.பிகள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் வரவுசெலவுத் திட்டத்துடன் தொடர்பான ஆவணங்களையும் புத்தகங்களையும் ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றபோது பொலிஸார் அவற்றை கைப்பற்றி தடுத்து வைத்ததாகவும் அவை மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை எனவும் ஜயலத் ஜயவர்தன கூறினார். நாடாளுமன்றத்திற்கு ஆவணங்களை கொண்டுசெல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவங்கள் ஐ.தே.கவினால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஜயலத் ஜயவர்தன பதிலளிகையில் எது சிறந்ததோ அதை திட்டமிடுவதற்கு ஐ.தே.கவுக்கு உரிமை உள்ளது. நாம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அல்லாமல் ஐ.தே.க. நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவோம்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’