வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 நவம்பர், 2011

ரிஸானா நபீக்கை சந்தித்த பெற்றோர்


வூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கும் அவரது பெற்றோரும் உணர்ச்சி வசப்பட்ட சூழ்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தித்துக்கொண்டனர்.
தனது எஜமானாரின் குழந்தையை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டில் ரிஸானா நபீக்கிற்கு கடந்த 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. சவூதி அரேபியாவிற்குச் சென்றுள்ள ரிஸானா நபீக்கின் பெற்றோர், சிறைச்சாலையிலுள்ள தமது மகள் ரிஸானா நபீக்கை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இதன்போது 'என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்' எனக் கூறி ரிஸானா நபீக் அழுதார். 'எல்லாம் வல்ல அல்லா எங்களது மகளை மீண்டும் கிடைக்க உதவ வேண்டும்' என ரிஸானா நபீக்கின் தாயார் கூறினார். இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான காலம் கூடிய விரைவில் வருமென ரிஸானா நபீக்கின் தாயார் தனது மகளுக்கு கூறினார். சவூதி அரேபியாவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றி வருகின்ற வைத்தியரும் சமூக சேவையாளருமான கிபாயா இப்திகார் என்பவருடனையே பெற்றோர் ரிஸானா நபீக்கை சென்று பார்வையிட்டனர். 'இதுவொரு சிக்கலான விடயம்' என இலங்கை அதிகாரிகள் விமர்சித்தனர். உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்தால் மாத்திரமே ரிஸானா நபீக்கை காப்பாற்ற முடியுமென சவூதி அரேபியாவிலுள்ள சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கை வேலைவாய்ப்பு முகவரகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் பிரதிச் செயலாளர் இப்ராஹிம் சஹிப் அன்சார், நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷெரீப் முகமட் தௌபீக் ஆகியோர் சவூதி அரேபியாவுக்குச் சென்றனர். மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை சவூதி அரேபியாவைச் சென்றடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. ரிஸானா நபீக்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரையும் அந்த நாட்டுத் தலைவரையும் மேற்படி குழுவினர் கோரவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’