வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 நவம்பர், 2011

துமிந்தவின் கைது விடயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்: கெஹெலிய


க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நாட்டில் உள்ள சட்டத்துக்கு அமைய அவரது கைது விவகாரம் இடம்பெறும் என்று அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இவேளை, துமிந்த சில்வா தமது மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளமைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இது அவரது குடும்பத்தினர் தொடர்புபட்ட விடயம் என்றும் அமைச்சர் கெஹிலிய தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதன்போது, துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் கொல்லப்பட்டதுடன் துமிந்த சில்வா எம்.பி. படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’