வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 நவம்பர், 2011

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்: யசூசி அகாஷி


னப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என இலங்கைக்கான ஜப்பானிய முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷி உறுதியளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பை வந்தடைந்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷியிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே இந்த உறுமொழியை வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள இச்சந்தர்ப்பமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த சந்தர்ப்பதம் என தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, யுத்ததிற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கம், தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்காமை, சமகால அரசியல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு - யசூசி அகாஷியிடம் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். இச்சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரமேசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’