ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரைநிகழ்த்திக்கொண்டிருந்தபோது அரசாங்கத் தரப்பு எம்.பிகளுக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. எம்.பிகளுக்கும் மோதல்நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஐ.தே.க. எம்.பிகள் சிலர் வரவுசெலவுத் திட்டமுன்மொழிவுகளுக்கு எதிராக கோஷமெழுப்பினர். சபையில் எழுந்து நின்ற எதிர்க்கட்சி எம்.பிகள் 'வெட்கம்' என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஐ.தே.க. எம்.பிகளின் இந்நடவடிக்கை அரசாங்கத் தரப்பு அங்கத்தவர்களின் சிலரின் ஆத்திரத்தை தூண்டியது. அதையடுத்து அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர் ஐ.தே.க. எம்.பிகளின் ஆசனங்களுக்கு அருகில் சென்று மேற்படி பதாகைகளை பறிக்கமுயன்றபோது மோதல்நிலை ஏற்பட்டது. தண்ணீர் போத்தல் வீச்சுகளும் இடம்பெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’