வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 நவம்பர், 2011

லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு


லிபியாவின் புதிய பிரதமராக அப்தெல் ரஹிம் அல் கெய்ப், அந்நாட்டு தேசிய இடைக்கால நிர்வாக கவுன்ஸிலினால் நேற்று திங்கட்கிழமை திங்கட்கிழமை தெரிவுசெய்யப்பட்டார். திரிபோலியைச் சேர்ந்த அப்தெல் ரஹிம் அல் கெய்ப் தொழில்நுட்பவியலாளரும் வர்த்தகரும் ஆவார்.
புதிய பிரதமர் பதவிக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேசிய இடைக்கால கவுன்ஸலின் 51 வாக்குகளில் 26 வாக்குகளைப் பெற்று அப்தெல் ரஹிம் அல் கெய்ப் புதிய பிரதமராக தெரிவானார். இவ்வாக்கெடுப்பு லிபியர்கள் தமது எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஆற்றலைக் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என தேசிய இடைக்கால நிர்வாகக் கவுஸ்லின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீல் கூறியுள்ளார். இதேவேளை லிபியாவில் தனது நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாக நேட்டோ நேற்று அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’