அநுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவை அரசாங்கம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் இணைத்துள்ளதென அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
கிராம அலுவலகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் திட்டத்தின் கீழே இது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர். வெலிஓயா பகுதியில் 9000 சிங்கள மக்கள் வாழ்கின்றனர். யுத்த காலத்தில் இவர்களால் முல்லைத்தீவுக்கு போகமுடியாத நிலை காணப்பட்டதில் இது அநுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பிரதேச செயலாளர் பிரிவுகள், கிராம அலுவலகர் பிரிவுகளின் எல்லை மீள்நிர்ணயத்துக்காக நியமிக்கப்பட்ட குழு அதன் சிபாரிசை இந்த வருட இறுதிக்குள் சமர்ப்பிக்குமென பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் கூறினார். புதிய மாவட்டமொன்றை உருவாக்கும் சாத்தியமுள்ளதாவெனக் கேட்டபோது, தற்போது அதற்கு சாத்தியமில்லையென அவர் கூறினார். இதேவேளை, வவுனியாவில் இரண்டு புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உருவாக்குமாறு தான் கேட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயத்துக்கு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி தன்னைச் சந்திக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் கூறினார். புதிய பிரதேச செயலாளர் பிரிவுகள் தேவையென சில அரசியல்வாதிகள் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’