வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 அக்டோபர், 2011

பிரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அவசரப்படவில்லை: ஜே.வி.பி.


ஜே.வி.பியிலிருந்து கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்துள்ள குழுவினருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஜே.வி.பி. அவசரப்படவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
ஜே.வி.பியில் அண்மையில் ஏற்பட்ட பிளவின் பின்னர் இன்று புதன்கிழமை நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்சியின் விசேட மாநாட்டை கூட்டுவதற்கான அவசரம் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்தார். இறுதியாக கட்சியின் மாநாடு இவ்வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்றது. அடுத்த மாநாடு இன்னும் 5 வருடங்களின் பின்னர் நடைபெறலாம் என அவர் கூறினர். எவ்வாறெனினும், தேவையேற்பட்டால் எந்த நேரத்திலும் விசேட மாநாட்டை கூட்டுவதற்கு கட்சியின் மத்திய குழுவுக்கு அதிகாரம் உள்ளது என ரில்வின் சில்வா தெரிவித்தார். ஜே.வி.பியின் பிளவு ஏற்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாடு இதுவென்ற போதிலும் ஆரம்பத்தில் அவர் கட்சிக்குள் நிலவும் பிரச்சினை பற்றி எதுவும் கூறவில்லை. 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பாகவே கருத்து தெரிவித்த அவர், இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஏற்படவுள்ள ஆபத்துகளை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாமைக்கு எதிராக ஒக்டோபர் 24 ஆம் திகதி கொழும்பில் ஊர்வலமொன்றை நடத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கட்சிக்குள் நிலவும் பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் வினவியபோது, சிறிய தொரு குழுவினர் கட்சியிலிருந்து பிரிந்து, தலைமைத்துவத்திற்கு எதிராக அங்கும் இங்கும் கருத்துகளை வெளியிடுவதாக ரில்வின் சில்வா கூறினார். முரண்பாட்டுக் குழுவினர் ஜே.வி.வியின் மத்திய குழுஅங்கத்தவர்கள் எனக் கூறிக்கொள்வதுடன் கட்சித் தலைமையை பகிரங்கமாக விமர்சிப்பது குறித்து கேட்டபோது. 'அவர்களின் பெயர்கள் புத்தகத்தில் இருக்கலாம். அவர்களுக்கு எதிராக மத்திய குழு உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும்' என ரில்வின் சில்வா பதிலளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’