வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 அக்டோபர், 2011

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆணையிடும் நாள் வெகு தொலைவில் இல்லை: ரணில்


னநாயக விரோதமாக செயற்படும் வன்முறை அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆணையிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதற்கான தலைமைத்துவத்தை கொழும்பு வாழ் மக்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது அரசாங்கம் வெளிப்படையாகவே தேர்தல் சட்டங்களை மீறியது. பொது மக்களை அச்சுறுத்தி வாக்குகளை சூறையாட முற்பட்டது. பல சவால்களுக்கு மத்தியில் பொது மக்கள் அரசாங்கத்திற்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட விசேட செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவர் தொடர்ந்தும் கூறுகையில், அரச வளங்கள் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் தனக்கு சாதகமான வகையில் தேர்தல்களை நடத்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளை தனக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தக் கூடிய பிரதேசங்களின் தேர்தல் மேடைகளில் முன் வைத்து கபடத்தனமான வெற்றிக்கு முயற்சி செய்தது. ஆனால் கொழும்பு மாநகர சபைத் தேர்தல் அதற்கு சிறந்த பாடத்தை புகட்டியுள்ளது. வன்முறை கலாசாரத்திற்கு முடிவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த எதிர்ப்பை வெகு விரைவில் ஏனைய மக்களும் வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’