வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 அக்டோபர், 2011

மனித உரிமை மீறல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்: ஆஸி. பிரதமர்


ள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை இலங்கை கவனத்திற்கொள்ள வேண்டுமென்று அவுஸ்திரேலியா விரும்புவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அந்த நாட்டுப் பிரதமர் யூலியா கிலாட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் பந்துல ஜயசேகர நியூஸ் 24 இற்கு கூறினார். அடைக்கலம் கோருவோர்களை மாற்றிக்கொள்ளும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதென்பது ஏற்கெனவே மலேஷியா அறிந்த விடயமாயினும் மலேஷியப் பிரதமருடன் அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கிலாட் பேசவுள்ளாரென தெரிகிறது. ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை வலியுறுத்த பொதுநலவாயத்துக்கு கூடிய அதிகாரத்தை வழங்கக்கூடிய மாற்றங்கள் பற்றி அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கிலாட் ஏனைய தலைவர்களுடன் பேசி வருகின்றார். சகல தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே மாற்றங்கள் அமுலுக்கு வரமுடியும். வணிகம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவுள்ள இன்றைய கூட்டத்தில் பல பெரிய சுரங்கக் கம்பனிகளின் பிரதிநிதிகள் தூதுக்குழுவினருடன் பேசவுள்ளனர். கல்விக்கான நிதியொதுக்கீட்டை சமநலவாய நாடுகள் அதிகரிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட், அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். உலகில் 67 மில்லியன் பிள்ளைகள் ஆரம்பக்கல்வி பாடசாலைகளுக்கு செல்லாதுள்ளனரென அவர் கூறினார். ஒருவரின் பாடசாலைக்காலம் ஒரு வருடத்தால் அதிகரிக்கும்போது வருமானம் 10 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளனவென கெவின் ருட் குறிப்பிட்டுள்ளார். (DM)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’