கிறீன் கார்ட் லொத்தர் என்று அழைக்கப்படும் 2013ஆம் ஆண்டுக்கான அமெரிக்கா குடிவரவு விசா பெறுவதற்கான குழுக்கலுக்கான இணையத்தள மூலமான விண்ணப்பங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது.
இந்த விஸாவுக்காக இலங்கை மற்றும் மாலைதீவு உட்பட பல நாடுகளிலிருந்து 50,000 பேர் குழுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்காவில் சட்ட ரீதியாக வசிப்பதற்கு அல்லது படிப்பதற்கு அல்லது கலவி சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இந்த கிறீன் கார்ட் லொத்தர் பதிவினை www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும். அதேவேளை, கிறீன் கார்ட் லொத்தர் தொடர்பான மேலதிக தகவல்களை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பெறுவதற்கு srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html எனும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நவம்பர் 5ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் கீறின் கார்ட் லொத்தாருக்கான பதிவுக் கட்டணம் முற்றிலும் இலவசமாகும். ஒரு நபர் குறித்த கிறீன் கார்ட் லொத்தருக்கு ஒரு தடவை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். ஒரு தடவைக்கு மேல் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இதேவேளை, தாமதங்களை தவிர்ப்பதற்காக முன்னரே விண்ணப்பிக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அடுத்த வருடம் மே முதலாம் திகதி முதல் www.dvlottery.stat.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக பதிவு இலக்கத்தினை பெற முடியும். வெற்றியாளர்களுக்கு தபால், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்படமாட்டாது.
விண்ணப்பங்களின் பெறுபேறு அறிவுறுத்தல்கள் தொடர்பான விடயங்கள் www.dvlottery.stat.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே வழங்கப்படும். கிறீன் கார்ட் லொத்தர் ஊடாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு அமெரிக்கா செல்ல ஒரு வருட காலம் வழங்கப்படும்.
இதேவேளை, இந்த கிறீன் கார்ட் லொத்தர் செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் வெளியாட்கள் எவரையும் நியமிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.
வெளியாட்களிடம் பல மில்லியன் பணம் செலுத்தி கிறீன் கார்ட் லொத்தர் விண்ணப்பங்களை பெறுவதற்கு அமெரிக்க அரசாங்கம் பொறுப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’