இ லங்கையில் அடுத்த வரும் பொதுநலவாய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு கனடாவும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்மாநாடு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் என்பதால் இதையிட்டு பேசுவது பொருத்தமற்றது எனக்கூறி இலங்கையின் கௌரவத்தை இந்தியா காப்பாற்றியது என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றாமல் போகலாம் என கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் முன்னர் தெரிவித்திருந்தார். அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதையும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குவதையும் கனடா வலியுறுத்துகிறது என அவர் கூறினார். இந்திய வெளியுறவு செயலாளர், ஸ்ரீரஞ்சன் மத்தாய், 25 ஆம் திகதி நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் அடுத்த வருட பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானம் 2009 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது எனக் கூறினார். 'இது மீண்டும் பேசப்பட வேண்டிய வியடமல்ல' என அவர் கூறினார். மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, என்பவற்றை கண்காணிக்கவென ஒரு ஆணையாளரை பொதுநலவாயம் நியமிப்பதற்கு இந்தியா காட்டும் எதிர்ப்பு பற்றி வினவியபோது, இந்த விடயங்களை ஏற்கெனவே செயாளர் நாயகம் மற்றும் பொதுநலவாய அமைச்சர்களின் நடவடிக்கை குழு என்பன கவனித்து வருகின்றன என அவர் கூறினார். இரண்டாவதாக, ' இந்நடவடிக்கை ஐ.நாவின் ஆணையாளர்கள் மேற்கொள்கின்றனர். அத்துடன் இந்த நடவடிக்கை ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பொதுநலவாய அமைப்புக்கு மேலதிக செலவை ஏற்படுத்திவிடும். புதிய அமைப்புகளை உருவாக்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள அமைப்புகளை மேலம் ஸ்திரப்படுத்துவதே சிறப்பானது' என அவர் கூறினார். மேற்படி செய்தியளார் மாநாட்டின் விபரங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் உள்ளூர் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’