பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இலங்கை விஜயத்தின்போது, அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரும் பயணித்தமை தொடர்பாக அமைச்சர் லியாம் பொக்ஸ் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
34 வயதான அடம் வெரைட்டி என்பவர் லியாம்பொக்ஸுடன் ஒரே தொடர்மனையில் வசித்ததுடன் லியாம் பொக்ஸின் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழராகவும் விளங்கியவர். அவர் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சை பயன்படுத்தி லியாம்பொக்ஸின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தில் பங்குபற்றியமை குறித்து பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பிரித்தானிய இராணுவத்தினருக்கு உபகரணங்களை விற்கும் நிறுவமொன்றுடன் துபாயில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சந்திப்பொன்றில் தனது நண்பர் வெரைட்டியுடன் லியாம்பொக்ஸ் பங்குபற்றியதாகவும் அதில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் எவரும் பங்குபற்றவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தினால் பிரிட்டனின் தேசிய பாதுகாப்பு சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சிலர் விமர்சித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லியாம் பொக்ஸ் கடந்த வருடம் லண்டனில் சந்தித்தபோதும் அடம் வெரைட்டி உடனிருந்தாகவும் லியாம் பொக்ஸுடன் இலங்கைக்கு வந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அடம் வெரைட்டி தன்னுடன் உத்தியோகபூர்வ பயணத்தில் பங்குபற்றவில்லை என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு லியாம் பொக்ஸ் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 'திரு வெரைட்டி பாதுகாப்பு அமைச்சின் ஓர் ஊழியர் அல்லர். எனவே அவர் என்னுடன் எந்தவொரு உத்தயோகபூர்வ விஜயத்திலும் பங்குபற்றவில்லை' என அமைச்சர் லியாம் பொக்ஸ் கூறியிருந்தார் ஆனால் இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள், மின்னஞ்சல், வீடியோ ஆதாரங்கள் லியாம் பொக்ஸை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. இலங்கை அரச தொலைக்காட்சியொன்றில் வெளியான வீடியோ காட்சிகளையும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் அவரின் நன்பர் பங்குபற்றியமைக்கான ஆதாரரமாக பிரித்தானிய ஊடகங்கள் முன்வைத்துள்ளன. இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு ரீதியான விசாரணையொன்றுக்கும் அமைச்சர் லியாம் பொக்ஸ் உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் லியர் பொக்ஸுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் உத்தரவிட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’