வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 அக்டோபர், 2011

'நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும்'

னாதிபதி மஹிந்த ராஜபகஷ தமிழ்மக்களின் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வு, அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார். இவ்வாறானதோர் தருணத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இன்னொரு அமைச்சர் பயங்கரவாதத்திற்கு துணை போனவர்களுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் சுமூகமான தீர்வை காண்பதற்கு முட்டுக்கட்டையாக அமையும். பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் கிடையாது. இவ்வாறான கருத்துக்களால் இனவாதம் ஊக்குவிக்கப்படும். பழைய பிரச்சினைகளை மீண்டும், மீண்டும் கிளறி கொண்டிருப்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் இருதரப்பு கடும் போக்காளர்களுக்கு சாதகமாக அமையும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் யதார்த்தம். அத்தோடு இவ்வாறான கருத்துக்கள் தமிழ்மக்கள் மத்தியிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். எனவே ஜனாதிபதி தமிழ்மக்களுக்கான அரசியல்தீர்வை முன்வைக்க வேண்டும். இதன்மூலமே கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழ்மக்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’