வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பொதுநலவாய உச்சிமாநாடு : கனேடிய பிரதமரின் கருத்துக்கு இலங்கை ஏமாற்றம்


2018 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்து கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்த கருத்துக்கு இலங்கை தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
'2009 ஆம் ஆண்டு ட்ரினிடாட் அன்ட் டுபாகோவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின்போது, 2013 ஆம் ஆண்டு உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு உச்சிமாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்விவகாரத்தை மீண்டும் கிளறுவது முறையற்றது' என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெய்ர்ட்டிடம் இலங்கை உயர் ஸ்தானிகர் சித்ராஞ்சனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்ற தூதுக்குழுவொன்றை இலங்கை;கு அனுப்புவதன் சாத்தியம் குறித்தும் ஆராயப்பட்டதாக கனடாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக தான் இலங்கைக்கு செல்லப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கடந்த வாரம்கூறியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’