வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 செப்டம்பர், 2011

பாம்பாட்டியின் பாம்பு தீண்டியதால் நெதர்லாந்து பிரஜை வைத்தியசாலையில்

மாரவில கடலோரத்தில் பாம்பாட்டி ஒருவரின் பாம்புடன் விளையாடிய நெதர்லாந்துப் பிரஜை ஒருவர் அப்பாம்பு தீண்டியதால் சிலாபம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய மாரியுன் ஸ்பேன் என்பவரே பாம்புக் கடிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார். உல்லாசப் பயணம் மேற்கொண்டு கடந்த 18ம் திகதி நண்பர்களுடன் இலங்கைக்கு வந்துள்ள இவர், நேற்று நண்பர்களுடன் மாரவில கடற்கரையோரமாக உலாவிக் கொண்டிருந்த வேளை அங்கு மாம்பாட்டி ஒருவர் பாம்பு ஆட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு அவ்விடத்திற்குச் சென்றுள்ளார். அவ்விடத்தில் நெதர்லாந்து பிரஜை பாம்பாட்டியின் விஷப் பாம்பு ஒன்றுடன் விளையாட முற்பட்ட போது அப்பாம்பு அவரைத் தீண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாம்புக் கடிக்குள்ளான வெளிநாட்டுப் பிரஜை உடனடியாக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’