வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 செப்டம்பர், 2011

தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: சவேந்திர சில்வா

மிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள்; தளபதிகளான ரமேஷ் மற்றும் சூசையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவியும் சூசையின் சகோதரியுமான வத்சலா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வத்சலா அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் தொடுத்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ' அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு எல்.ரி.ரி.ஈயின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் எவ்வாறு தமக்கு வெள்ளையடித்துக் கொள்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் வாழும் மக்கள் அறிந்து கொள்வதற்கு இது நல்ல வாய்ப்பாகும்' என டெய்லி மிரருக்கு அவர் தெரிவித்தார். 'இது எல்.ரி.ரி.ஈயின் சர்வதேச வலையமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான இன்னொரு வழியாக இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் எனது நாட்டினதும் அப்பாவி பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக புலிகளை தோற்கடிக்கப் போராடிய எனது படையினரதும் கௌரவதத்தை பாதுகாப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்' என அவர் கூறினார். 'எனக்கு கிடைத்த தகவல்களின்படி அவர் (வத்சலா) யுத்தத்தின் கடைசி நாட்டிகளில் தென்னாபிரிக்காவுக்கு தப்பிச் சென்று அங்கு வசிக்கிறார். தனது கணவர் மற்றும் சகோதரர் சூசையின் சார்பில் அவர் தமிழ் மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவர்கள் சொந்த தமிழ் மக்களிடமிருந்து கொள்ளைடியத்த பணத்தில் வாழ்ந்தார்கள். இப்போது அவருக்கு பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது போலும். இப்போது பணம் திரட்டுவதற்காக என்னை எதிர்க்கிறார். அவரின் கணவர் அரந்தலாவியில் மத குருக்களின் கொலை மற்றும் 600 பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு பொறுப்பான நன்கு அறியப்பட்ட பயங்கரவாதி' என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’