சிகிச்சைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்த இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி நாடு திரும்பியுள்ளார்.
தனது மகள் பிரியங்கா காந்தி வத்ராவுடன் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சோனியா காந்தி புதுடில்லியை வந்தடைந்தார்.
64 வயதான சோனியா காந்திக்கு அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எந்த நோய் தொடர்பாக இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’