இன்று குத்துபாட்டு போன்ற துள்ளல் பாடல்களுக்கு பேர்போனவர் பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. 'நல்ல இடத்து சம்மதம்' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், 1961ஆம் ஆண்டில் வெளியான 'பாச மலர்' படத்தில் பாடிய "வாரயென் தோழி.." என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.
துள்ளல் பாடலுக்கு பேர் போனவராக இருந்தாலும், காதோடுதான் நான் பேசுவேன் என்ற மெல்லிசை பாடல்களையும் பாடி அசத்திய இவர் பாடிய மற்றொரு பாடலான "பட்டத்து ராணி.." என்ற பாடலை இந்தியில் பாடகி லத்தா மங்கேஸ்கர், "பாட கடினமாக இருக்கிறது இதை அவர் பாடியது போல என்னால் பாட முடியாது" என்று கூறினாராம். "முத்துக்குளிக்க வாரீகளா...", "புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை...", "ஆடவரரெல்லாம் ஆட வரலாம்...", "மலரென்ற முகம் என்று.." உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும், என்றும் இசைப் பிரியர்களின் மனதில் என்றென்றும் நிற்கும். அத்தகைய அற்புத இசையினை அளித்த எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று 30000 பாடல்களை பாடியிருக்கிறார். சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள் உலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்த இவரது, "செல்லாத்தா எங்க மாரியாத்தா" என்ற பாடல் கேற்காத பகுதிகளே தமிழகத்தில் இருக்க முடியாது. கலைமாமணி, நந்தி விருது, பாரத கான பூஷனி, ஆஷா போன்ஸ்லேயின் வாழ்நாள் சாதனையாளர் விருது, பிலிம் பேர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சிறந்த பாடகிக்கான விருதினை ஒன்பது முறை பெற்றிருக்கிறார். இப்படி தனது இசையால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்த எல்.ஆர்.ஈஸ்வரி தனது இசைப் பயணத்தின் 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து, அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 25ஆம் தேதியன்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள், பாடகி-பாடகர்கள், பிரபலங்கள் கலந்துகொள்ளப் போகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்களை இப்போதுள்ள முன்னணி பாடகர்கள் பாடி நிகழ்ச்சியை இன்னும் சிறப்புறவும் செய்ய இருக்கிறார்கள். சங்கரின் சாதகைப் பறவைகள் மற்றும் ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். (டிஎன்எஸ்)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’