வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 செப்டம்பர், 2011

சந்தேக நபர்களை பொலிஸார் 48 மணித்தியாலங்கள் தடுத்துவைக்க முடியும்: நீதியமைச்சர்

திர்க்கட்சியின் எதிர்ப்பின் காரணமாக குற்றவியல் சட்டக்கோவை நடவடிக்கைமுறை (விசேட ஏற்பாடு) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முடியாமல்போயினும் சாதாரண சட்டத்தின் கீழ் சந்தேக நபரொருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இப்போதும் உண்டென நீதியமைச்சு நேற்று தெரிவித்தது.
நிறைவேற்றப்படாமல் போன இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் பேசவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார். 'நாம் வர்த்தமானி அறிவித்தலின்படி ஒழுங்கு விதிகளை வெளியிட்டுள்ளோம். இந்த விதிகள் அப்படியே உள்ளன. எனவே பொலிஸாருக்குத் தேவையான அதிகாரமுள்ளது. நாடாளுமன்ற அங்கீகாரம் வெறும் ஒப்புக்காகவே' என அவர் கூறினார். இந்த சட்டமூலம் பற்றி எதிர்க்கட்சி கூறிய கருத்துக்களை கவனத்திற்கொண்டு அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்கவுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக் வேண்டிய நிலைமையை மாற்றி இந்த விதிகளை நிரந்தரமாக்கும் எண்ணம் உள்ளதா எனக் கேட்டபோது இதையும் தாம் கருத்திற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’