மு ன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் 15 ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.
நேற்று வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரொமேஷ் டி சில்வா, 'ஜனாதிபதி இராணுவ நீதிமன்றின் தீர்ப்பை மட்டுமே உறுதி செய்துள்ளார். ஆனால் சரத் பொன்சேகா செய்ததாக கூறப்படும் குற்றத்தை அவர் உறுதி செய்யவில்லை. எனவே இராணுவ நீதிமன்றம் இவர் மீது கண்ட குற்றத்தை இல்லாது செய்ய வேண்டும்' என நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் எறிக் பஸநாயக்க, ஏ.டபிள்யஸ்ரீ.ஏ. சலாம், உபாலி அபேரத்ன ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழாம் தீர்ப்பை டிசெம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’