வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இளம்பெண்களை சீரழிப்பது பணக்காரர்களுக்கு பொழுதுபோக்காகிவிட்டது: கேரள உயர் நீதிமன்றம்

ளம்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது பணக்காரர்களுக்கு பொழுதுபோக்காகிவிட்டது என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சங்கரன் தெரிவித்துள்ளார்.


கேரளாவைச் சேர்ந்த 14 வயது மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கைதாகியுள்ள கேரள மாநில சிபிஎம் தலைவர் தாமஸ் வர்கீஸ் உள்பட 8 பேர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கே.டி. சங்கரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கூறியதாவது,
இளம்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது பணக்காரர்களுக்கு பொழுதுபோக்காகிவிட்டது. கன்னிப் பெண்களுக்கு மவுசு அதிகமாகிவிட்டது. ஒரு வேளை எய்ட்ஸ் நோய் வந்துவிடும் என்று தான் இப்படி செய்கிறார்களோ? என்றார்.
பின்னர் அவர் அந்த 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பரவூரைச் சேர்ந்த 14 வயது மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் அந்த மாணவியின் தந்தை உள்பட 60 பேர் கைதாகியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’