வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இந்தியாவுடன் பிணக்கை ஏற்படுத்த வைகோ உட்பட தமிழக தலைவர்கள் சிலர் முயற்சி : கெஹெலிய

லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றனர். முக்கியமாக வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகள் இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றனர். இலங்கையிலிருந்து
சென்ற யாத்திரிகர்கள் சிலர் சென்னையில் தாக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பில் நாங்கள் தீவிரமான முறையில் செயற்படுவதுடன் இலங்கை தூதகரம் ஊடாக இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளோம். இந்த விடயத்தில் எமக்கு சிறந்த பதில் கிடைக்கும் என்றும் நம்புகின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள விடயத்துடன் அரசாங்கத்துக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை. அது தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுயாதீன செயற்பாடாகும். அது தொடர்பில் மேன்முறையீடு செய்தால் ஆராயப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:
இலங்கையிலிருந்து சென்ற யாத்திரிகள் சிலர் சென்னையில் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு இந்த விடயத்தில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதனை நாங்கள் ஆழமான நோக்கில் ஆராய்ந்துவருகின்றோம்.
தமிழகத்தின் அரசியல் பின்னணி மற்றும் வைகோவின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றனர். முக்கியமாக வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகள் இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
கடந்தகாலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது இடம்பெற்றுள்ளது. இலங்கை தூதரகம் ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு இது தொடர்பிர் அறிவிக்கப்படும். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’