வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடமே கேட்கவேண்டும்: அனுர

நாட்டில் அவசரகாலச் சட்டம் முற்றாக அகற்றப்பட்டுள்ளதே தவிர பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யப் படவில்லை. அதற்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையினால் அந்தச் சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்று நீங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம்தான் வினவவேண்டும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திøணக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்று ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் விஷேட கூற்று ஒன்றை விடுத்து அவசரகாலச் சட்டம் முற்றாக அகற்றப்படுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் இன்று முதல் (நேற்று) நாடு சாதாரண சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யப்படும். நாட்டை நிர்வகிக்க அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று அரசாங்கம் கருதியதன் காரணமாக அவசரகாலச் சட்டத்தை முழுமையாக நீக்க தீர்மானித்துள்ளது. கேள்வி: பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு என்ன நடக்கும்? பதில்: அது பற்றி எனக்கு தெரியாது. நாட்டில் அவசரகாலச் சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கான பிரேரணை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. காரணம் பயங்கரவாத தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும் இருவேறுபட்ட விடயங்களாகும் என்பதனை குறிப்பிடவேண்டும். கேள்வி: அப்படியானால் அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு என்ன நடக்கும்? பதில்: அதனை நீங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தான் கேட்கவேண்டும். எனக்கு அதுபற்றி எதுவும் கூற முடியாது. சட்டமா அதிபர் திøணக்களத்திடம் வினவவேண்டும். கேள்வி: இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே அவசரகாலச்சட்டம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே? பதில்: அவ்வாறு எதுவும் இல்லை. இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே அவரேகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை. நாட்டை நிர்வகிக்க அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்று அரசாங்கம் கருதியதன் காரணமாக அவசரகாலச்சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாறாக அவ்வாறு அவசரகால சட்டத்தை நீக்குமாறு எமக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. காரணம் இலங்கை இறைமையுள்ள நாடு. எமது நாட்டின் இறைமையை பாதுகாக்க ஏனைய நாடுகள் கடமைப்பட்டுள்ளன. எனவே அவ்வாறு எவரும் அழுத்தம் கொடுக்க முடியாது. நாங்கள் தொடர்ந்தும் அடிமை என்ற மனப்பான்மையுடன் இருக்கக்கூடாது. அதிலிருந்து விடுபடவேண்டும். கேள்வி: சிரேஷ்ட அமைச்சர்களுக்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? பதில்: சிரேஷ்ட அமைச்சர்களுக்கு துறைசார் நிபுணர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது. முக்கியமாக சிரேஷ்ட அமைச்சர்களின் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே அவர்களுக்கு ஆலோசகர்கள் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் துறைசார் நிபுணர்கள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஏமாறவேண்டாம் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு மர்ம மனிதர்கள் என்ற கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அவற்றைக்கேட்டு மக்கள் ஏமாற்றமடைந்துவிடக்கூடாது என்று கோரிக்கை விடுக்கின்றோம். இது தொடர்பான அசம்பாவிதங்கள் காரணமாக அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. உயிர்கள் மட்டுமன்றி சொத்துக்களும் சேதமடைந்துள்ளன. அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இவை வெறும் கட்டுக்கதைகளாகும். எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவம் அளிக்கவேண்டாம் என்றும் கோருகின்றோம். இவை அர்த்தமற்ற விடயங்கள். எனவே எக்காரணம் கொண்டும் மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் காணப்படின் அதனை பொலிஸாருக்கோ அல்லது முக்கியஸ்தர்களுக்கோ அறிவியுங்கள். மாறாக சட்டத்தைக் கையில் எடுக்கவேண்டாம். கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுகள் தொடருமா? பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. ஆனால் கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. எனவே நிபந்தனைகளை ஏற்பதுதான் சிக்கலாகவுள்ளது. நிபந்தனைகளுடன் பேசுவது சாத்தியமற்ற விடயமாகவே உள்ளது. ஆனால் பேச்சுக்கு அரசாங்கம் தயார். இதேவேளை விரிவான முறையில் கலந்துரையாடி அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதாவது பாராளுமன்றம் என்பது அதியுயர் அதிகார பீடமாகும். பாராளுமன்றத்தில் எட்டப்படுகின்ற தீர்வை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதியும் அறிவித்துள்ளார். எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த மார்க்கமாகும். பாராளுமன்றத்தில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளும் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதினால் விரிவான தீர்வுக்குச்செல்ல முடியும். கேள்வி: தேர்தலுக்கு எவ்வாறு ஆளும் கட்சி முகம்கொடுக்கும்? பதில்: தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சி தேர்தலுக்கு முகம் கொடுக்க தாயாராகிவிட்டது. நாம் சிறந்த முறையிலான பிரேரணை வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்போம். மேலும் சிறந்த வேட்பாளர்கள் அணியையும் தெரிவு செய்துள்ளோச்ம் என்றார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’