கறுப்பு நிற ஹபாயாவுடன் பெண் வேடத்தில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து பெண்களுடன் ஒன்றாக நின்று தராவிஹ் நேரத் தொழுகையில் ஈடுப்பட்டிருந்த பெண்களை தாக்க முயற்சித்த இரு மர்ம மனிதர்கள் பெண்கள் கூச்சலிட்டதையடுத்து தப்பியோடிய சம்பவம் நாரம்மல பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசலொன்றில் இடம்பெற்றுள்ளது.
நாரமல்லபெந்தெனிகொட கிராமத்தின் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்படுவதாவது, பெந்தெனிகொட ஜூம்ஆ பள்ளிவாசலில் புதன்கிழமை இரவு நடைப்பெற்ற இரவு நேர தராவிஹ் தொழுகையில் சுமார் நூறு பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் அரைவாசி பேர் பெண்களாவர். ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் மறைக்கப்பட்ட பகுதிகளிலே தொழுகை நடைபெறுவது வழக்கமாகும். சம்பவம் நடந்த தினம் இரவு 8.40 மணியளவில் தொழுகையில் ஈடுப்பட்டிருந்த பெண்கள் கிறீஸ் மனிதன் என்று அலறியடித்துக் கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியேறவே தொழுகையில் ஈடுப்பட்டிருந்த ஆண்களும் வெளியேறினார்கள். ஹபாய் அணிந்த ஆண் மர்ம மனிதர்கள் இருவர் பள்ளிவாசல் கழிப்பறைக்கு மேல் ஏறி வயல் வெளியினூடாக ஓடி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு நேர தொழுகையிக்கு ஹபாய் அணிந்த புதியவர்கள் இருவர் சமூகமளித்ததை தாங்கள் கண்டதாகவும் வெளியில் இருந்து இரு பெண்கள் தொழுவதற்கு வந்திருக்கலாமென நினைத்து சந்தேகம் கொள்ளவில்லை என பெண்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். பெந்தெனிகொட ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை அவசரக்கூட்டம் ஒன்றை கூட்டி நடைப்பெற்ற சம்பவம் தொடர்பாக ஆராய்ந்தது. முஸ்லிம்களின் இரவு நேர தொழுகைக்கு பாதுகாப்பு வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் நாரமல்ல பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மர்ம மனிதர்கள் தொடர்பில் கிராம மக்கள் விழிப்பூட்டப்பட்டுள்ளனரென பெந்தெனிகொட கிராம வாசியொருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’