அவுஸ்திரேலிய அணியுடனான 5 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஷித் மாலிங்க இன்று ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாலிங்க மூன்றாவது தடவையாக ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். போட்டியின் 46 ஆவது ஓவரில் 234 பந்துகளில் முறையே ஜோன்ஸ்டன், ஹாஸ்டிங்ஸ், டோஹர்த்தி ஆகியோரை லஷித் மாலிங்க ஆட்டமிழக்கச் செய்தார் . இதுவொரு புதிய உலகசாதனையாகும். இதற்குமுன் வஸிம் அக்ரம், சக்லைன் முஸ்தாக், சமிந்த வாஸ், மற்றும் லஷித் மாலிங்க ஆகியோர் தலா இரு தடவை ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். ஆர். பிரேமதாஸ அரங்கில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.1 ஓவர்களில் 211 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. லஷித் மாலிங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’