வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

கருணை மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சென்னை நீதிமன்றில் வழக்கு

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தமைக்கு எதிராக இம்மூவரும் சென்னை உயர் நீதிமன்றில் (மேல் நீதிமன்றம்) இன்று வழக்குத் தாக்கல் செய்தனர்.
மனுதார்கள் மூவரின் சார்பாக சட்டத்தரணி என். சந்திரசேகரன் ஆஜரானார். இது தொடர்பாக எழுத்துமூலம் மனுதாக்கல் செய்யுமாறு சட்டத்தரணியை அறிவுறுத்திய நீதிபதி போல் வசந்தகுமார் இவ்வழக்கு நாளை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்ட மேற்படி மூவரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரில் ஒரே இந்திய பிரஜையான ஏ.ஜி.பேரறிவாளன், தான் 26.04.2000 ஆம் திகதி இந்திய ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பியதாகவும் ஆனால் 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே இம்மனு தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது அநாவசியமான, சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு முரணான காலதாமதமாகும் என அவர்கூறியுள்ளார். ஜனாதிபதிக்கும் தமிழ் நாடு ஆளுநருக்கும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி தான் மீண்டும் கருணை மனு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’