வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கட்சிகளின் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி நீக்கப்படும்

மிழீழ விடுதலைப் புலிகள் 1989 ஆம் ஆண்டு உருவாக்கிய அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியானது அரசியல் கட்சிகளுக்கான புதிய விதிமுறைகளின் கீழ் தேர்தல்கள் திணைக்களத்தின் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளது.
பிரேமதாஸ அரசாங்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி எனும்கட்சியை புலிகள் பதிவு செய்தனர். அதன் தலைவராக மாத்தையா எனும் மஹேந்திரராஜாவும் செயலாளராக யோகரட்ணம் யோகியும் குறிப்பிடப்பட்டிருந்தனர். அக்கட்சி தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட கட்சியின் பட்டிலில் இருந்தாலும் அக்கட்சியின் பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. எனினும் 2008 ஆம் அண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அக்கட்சியின் சார்பில் சிலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர் 3 மாவட்டங்களினதும் வாக்குச்சீட்டுகளில் அக்கட்சியின் புலிச்சின்னம் காணப்பட்டது. எனினும் வேட்புமனுத் தாக்கலின்போது எவரும் அதை ஆட்சேபிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அரசியல் கட்சிகக்கான புதிய விதிகளின்படி, அரசியல் கட்சிகள் தமது வருடாந்த கணக்கறிக்கையையும் மாநாட்டு அறிக்கையையும் தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி போன்ற பல கட்சிகள் பல வருடங்களாக இதைச் செய்யவில்லை. எனவே இத்தகைய கட்சிகள் பதிவிலிருந்து நீக்கப்படவுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’