வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை 7ஆம் திகதிக்குள் தூக்கிலிட உத்தரவு


ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதிக்குள் தூக்கிலிட வேண்டும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சினால் தமிழக அரசினூடாக வேலூர் சிறைச்சாலை அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு இன்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் அறிவிக்க சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தங்களது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு இவர்கள் கருணை மனு அனுப்பினர். இருப்பினும் அந்த கருணை மனு ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிப்பு பற்றிய ஜனாதிபதியின் முடிவு பற்றி இந்திய மத்திய உள்துறை அமைச்சினால் தமிழக அரசினூடாக வேலூர் சிறைச்சாலை அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் மேற்படி மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’