வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஜூலை, 2011

லிபிய கிளர்ச்சியாளர்களை சட்டரீதியான அரசாக ஏற்றது பிரித்தானியா: நிதியுதவி அளிக்கவும் திட்டம்

லிபியாவில் கடாபி அரசுக்கெதிரான கிளர்ச்சிக் குழுவை சட்டரீதியான அரசாங்கமாக தாம் ஏற்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை விடுவிக்கவுள்ளதாகவும் அவற்றின் மூலம் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாகவும் ஹோக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரித்தானியாவிலுள்ள லிபியாவின் தூதரக அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லிபிய தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய கடாபி ஆதரவு ஊர்வலமொன்றில் லொக்கர் பீ விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி மொஹமட் அல் மெகிராய் தோன்றியமைக்கும் ஹோக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லிபியப் புலனாய்வுத் துறை முன்னாள் அதிகாரியான 59 வயதான மெகிராய், 1988 இல் பெருமளவான அமெரிக்கர்கள் உள்ளிட்ட 270 பேரின் உயிர்களைப் பலிகொண்ட லொக்கர் பீ விமானத் தகர்ப்பு சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2001 இலிருந்து ஸ்கொட்லாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த இவர 2009 ஆகஸ்டில் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால் வெறும் 3 மாதங்கள் வரையே உயிருடன் இருப்பார் என அப்போது நம்பப்பட்டது.
எனினும் அவர் இன்று வரை உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. _லிபியாவில் கடாபி அரசுக்கெதிரான கிளர்ச்சிக் குழுவை சட்டரீதியான அரசாங்கமாக தாம் ஏற்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை விடுவிக்கவுள்ளதாகவும் அவற்றின் மூலம் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாகவும் ஹோக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியாவிலுள்ள லிபியாவின் தூதரக அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை லிபிய தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய கடாபி ஆதரவு ஊர்வலமொன்றில் லொக்கர் பீ விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி மொஹமட் அல் மெகிராய் தோன்றியமைக்கும் ஹோக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

லிபியப் புலனாய்வுத் துறை முன்னாள் அதிகாரியான 59 வயதான மெகிராய், 1988 இல் பெருமளவான அமெரிக்கர்கள் உள்ளிட்ட 270 பேரின் உயிர்களைப் பலிகொண்ட லொக்கர் பீ விமானத் தகர்ப்பு சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 2001 இலிருந்து ஸ்கொட்லாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த இவர 2009 ஆகஸ்டில் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால் வெறும் 3 மாதங்கள் வரையே உயிருடன் இருப்பார் என அப்போது நம்பப்பட்டது.

எனினும் அவர் இன்று வரை உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’