கிகழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென இராணுவம் இன்றுமுதல் கிராம மட்டத்தில் அறிவித்தல் விடுக்கவுள்ளதாக அப்பிரதேச இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
'கடந்த சில வாரங்களில் நாம் பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம்;. இன்று முதல் கிராம மட்டத்தில் பகிரங்க அறிவித்தல்களை விடுக்கவுள்ளோம். சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் குறித்து பெறுமதியான தகவல்களை தருபவர்களுக்கு நாம் அன்பளிப்புகளையும் வழங்கவுள்ளோம்' என மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் இல்லை. ஆனால் சில குழுக்கள் கொள்ளைகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆயுதங்களை வைத்திருக்கின்றன' என அவ்வட்டாரங்கள் கூறின.
'அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை இதற்கு உதாரணமாகும். பல குழுக்கள் ரி-56, ரிவோல்வர்கள் போன்றவற்றை வை;திருக்கின்றன. சிலவேளை அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் தாமாக ஆயுதங்களை ஒப்படைத்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக இராணுவத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’