வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 17 ஜூலை, 2011

இந்தியா இங்கிலாந்தையும் வெல்லும்: கபில்தேவ் நம்பிக்கை

ந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்தும் என்று உலகக் கிண்ண நாயகன் கபில்தேவ் தெரிவித்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த நிலையில் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த கபில்தேவ் கூறுகையில்,

"சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரை வென்ற இந்திய அணியால் ஏன் இங்கிலாந்தை வீழ்த்த முடியாது?
இந்தியா நிச்சயம் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும். இந்திய வீரர்கள் இப்போது ஓய்வின்றி விளையாடி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் தம் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் இந்திய அணி தொடரை வென்றுவிட்டது.
விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகளாக வந்தால் அது விளையாட்டை சரியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு உதவும்.
அரசியல்வாதிகள் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகளாக வரக்கூடாது என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. அரசியல்வாதியோ, தொழில் அதிபரோ யாராக இருந்தாலும் அவர் விளையாட்டு வீரராக இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து" என்றார்.
எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்கும் பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தன்னம்பிக்கை மிக்க வீரரான கபில்தேவ் கூறியிருக்கும் கருத்து இந்திய வீரர்களுக்கும் நிச்சயம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’