இராணுவத்தினர் வெறும் ஆறு பேரை கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு கேலிக் கூத்து என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அக்குறனை பிரதேச சபைத் தேர்தலை முன்னிட்டு, அலவத்துகொடையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம்; ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரையும் பொதுமக்களையும் கொலை செய்ய வந்த 7 ஆயிரத்து 200 புலி உறுப்பினர்களை பக்குவமாக பராமரித்து, தொழில் பயிற்சி வழங்கி சமூகமயப்படுத்திய இராணுவத்தினரை வெறும் ஆறு பேரைக் கொலை செய்ததாக பெரிதுபடுத்தி சர்வதேச மட்டத்தில் புரளி கிளப்பியுள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’