-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
செவ்வாய், 12 ஜூலை, 2011
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் வரவேற்கப்படவில்லை: நியூஸிலாந்து
நி யூஸிலாந்திற்கு வரும் வழியில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்றபோது, அகதிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம். 'எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே உள்ளது.' 'நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல வேண்டும்' என எழுதப்பட்ட பதாகைகளை கப்பலிலுள்ள அகதிகள் வைத்திருந்தனர். புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நியூஸிலாந்து உதவியளிக்காதென நியூஸிலாந்துப் பிரதமர் கூறினார். 'அகதிகளில் சிலர் நியூஸிலாந்திற்கு வரவேண்டுமெனக் கூறி கொடிகளையும் பதாகைகளையும் தாங்கியவாறும் காணப்படுவதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும். அவர்கள் வரவேற்படவில்லையென்பதே எங்களது தகவல்' என ஜோன் கீ குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’