வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 ஜூலை, 2011

மலேசியாவில் இலங்கையர் கைது

போலியான பயண ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையர் ஒருவரையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவரையும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலேசியா பொலிஸார் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர்.


கோலலாம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் 29 வயதான நபர் நேற்று கைதுசெய்யப்பட்டு தடுத்துவைப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸ்மா அதிபர் தான் சிறி ஸ்மையில் ஒமர் தெரிவித்துள்ளார்.
'நாட்டை விட்டு வெளியேறவும் நாட்டிற்கு வருவதற்கும் இவர் போலியான பயண ஆவணங்களைச் பொதுமக்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது' என அவர் கூறினார்.
மேற்படி குடிவரவுத்துறை அதிகாரியுடன் தொடர்பு வைத்திருந்த 36 வயதான இலங்கையர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
'பல மாதங்களாக மேற்படி அதிகாரி போலியான பயண ஆவணங்களை வழங்கி வருகின்றாரென்று நாங்கள் நம்புகின்றோம்' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’