வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 ஜூலை, 2011

பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார்

ர்வதேச புகழ்பெற்ற தமிழ் அறிஞரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று புதன்கிழமை கொழும்பில் காலமானார்.

இலங்கையின் மூத்த கல்விமானான இவர், அண்மை காலமாக சுகயீனமுற்ற நிலையிலும் தமிழுக்கு தொண்டாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
79 வயதான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, யாழ். வடமாரட்சி, கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர். ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இலக்கிய துறையில் பணியாற்றி வந்த இவர், இலங்கை தமிழ் தொடர்பாக சுமார் 70 இற்கு மேற்பட்ட புத்தங்களை எழுதியுள்ளதுடன் 200 மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் பல விருதுகளை பெற்றுள்ள இவர், சென்னை பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகம், மற்றும் பின்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரும் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதி கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’