டார்பூர், லிபியா, இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்களுக்கு எதிராக விசாரணை நடத்த அமெரிக்கா கோருவதைப் போன்று, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் ஏனைய அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட , தடுப்புக்காவல் கைதிகள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
'டார்பூர், லிபியா, இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்களுக்கு எதிராக விசாரணை நடத்த அமெரிக்கா கோருவது சரியானது. ஆனால், இவ்விடயத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது.
அமெரிக்கா, தனது சொந்த அதிகாரிகளை விசாரணைகள் மற்றும் வழக்குகளிலிருந்து பாதுகாக்கும்போது, பாரதூரமான மீறல்கள் குறித்த உலகளாவிய முயற்சிகளை மற்றவர்கள் நிராகரிப்பது இலகுவானது' என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென்னத் ரோத் இன்று விடுத்த அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
புஷ் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் குறித்து கிடைத்துள்ள அதிகளவு ஆதாரங்கள், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட கைதிகள் மீதான துஷ்பிரயோகங்கள் குறித்து, ஜனாதிபதி பராக் ஒபாமா, குற்றவியல் விசாரணை நடத்த உத்தரவிடுவத்றகான கடப்பாட்டை ஏற்படுத்துகின்றன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பத்தகுந்த விசாரணைகளை நடத்த அமெரிக்கா தவறினால் கைதிகள் மீதான துஷ்பிரயோகங்களில் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏனைய நாடுகள் சர்வதேச சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர வேண்டும் எனவும் மனித உரிiமைகளகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’