வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஜூலை, 2011

சனல் - 4 புதிய வீடியோவும் போலியானது: இராணுவம்

நேற்றிரவு வெளியிடப்பட்ட சனல் - 4 வீடியோவிலுள்ள இரண்டு இராணுவ வீரர்கள் பற்றிய வீடியோ போலியானதென இலங்கை இராணுவத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

'இறுதியாக வெளியிடப்பட்ட வீடியோவிலுள்ளவர்கள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. முன்னர் வெளியிடப்பட்ட சனல் - 4 வீடியோவை நியாயப்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சியே இது' என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறினார்.
கடைசியாக வெளியிடப்பட்ட சனல் - 4 வீடியோவில் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது முன்களப்பகுதியில் அப்போதைய 58ஆவது படைப்பிரிவின் தளபதியான பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் கீழ் பணியாற்றிய ஒருவர் 'தேவையான எந்த வழியிலேனும் காரியத்தை முடித்து விடும்படி' பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரிகேடியர் சவேந்திர சில்வா பணிக்கப்பட்டாரென கூறியுள்ளார்.
இதேவேளை, நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. கட்டடத்திற்கு வெளியே இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சனல் - 4 வீடியோ ஊடகவியலாளர்கள் சந்தித்தபோது, அவர் புதிய குற்றச்சாட்டை நிராகரித்தார்.(DM)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’