காலஞ்சென்ற ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 15422 கிலோகிராம் எடையுடையது. சேவார்ட் ஜோன்ஸன் எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கியுள்ளார்.
1955 ஆம்ஆண்டு வெளியான 'த செவன் இயர் இட்ச்' எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யம் பெற்ற காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி திரைப்படக் காட்சியில் மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை கவுண் கடந்த மாதம் 46 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் இளவேனில் காலம்வரை இச்சிலை சிகாக்கோவில் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’