பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசுவொன்றை கைவிட்டு தலைமறைவாகிய பெற்றோரைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ள சம்பவம் புத்தளம், ஆணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆணமடுவ, ஊரியாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு தோட்ட வேலைக்காகச் சென்ற தம்பதியரே தங்களது சிசுவை கைவிட்டு தலைமறைவாகியுள்ளனர் என்று ஆணமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைவிடப்பட்டுள்ள சிசு தற்போது புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’