தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நெதர்லாந்திலுள்ள அவர்களின் தலைவர்களுக்குமான தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இலங்கை அதிகாரிகளையும் முன்னாள் போராளிகளையும் இக்குழுவினர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக இக்குழுவின் பேச்சாளர் ஜகோ பீரென்ட்ஸ் கூறினார்.
1983 முதல் 2009 வரை இடம்பெற்ற யுத்தத்தின்போது நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிதித்திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவு செயற்பாடுகள் குறித்து இக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
நெதர்லாந்திலுள்ள புலிகளின் தலைவர்களுக்கும் அமெரிக்கா, நோர்வே உட்பட பல நாடுகளிலுள்ள ஆதரவாளர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நடைபெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இலங்கையிலும் விசாரணை நடைபெறவுள்ளது.
இக்குழுவினர் 90 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக நெதர்லாந்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரேடியொ நெதர்லாந்து, செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’